தேவகோட்டை, ஜூலை 24: தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோவில் அருகே கே.வி.ஆர்.எம் தெருவை சேர்ந்த குமார் வீட்டில் கடந்த 16ம் தேதி 8பவுன் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள் கொள்ளை போனது. இதுபோல் அப்பகுதியில் பள்ளி ஆசிரியை மீனாட்சி வீட்டிலும் ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, காரைக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன்(42), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விக்னேஷ்(35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 பவுன் தங்கநகை, 24,500 ரூபாய் மற்றும் கார் ஒன்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
