குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

 

திண்டுக்கல், ஜூலை 24: திண்டுக்கல் நத்தம் ரோடு அரசு ஐடிஐ பின்புறம் கடந்த 10 நாட்களாக பற்றி எரியும் தீ புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திண்டுக்கல் நத்தம் ரோடு தோட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஐடிஐ பின்புறம் அன்னை நகர், சாஸ்திரி நகர், பாலமரத்துப்பட்டி ரோடு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இங்கு பல மாதங்களாக உணவக கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதிலிருந்து வீசும் துர்நாற்றம் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் முதியவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் மூச்சு விடவே சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தத் துர்நாற்றத்தால் பல்வேறு நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: