×

மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அரிதினும் அரிதான நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடிய விதி 267ன் கீழ் விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால் அதை அரசு ஏற்காததால் தொடர் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Rajya Sabha ,New Delhi ,Congress ,NEET ,House ,
× RELATED முதல்வர் அலுவலக அறிக்கைகள் மாயம்...