புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 60லிருந்து 62ஆக உயர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பை 60-லிருந்து 61 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேற்று ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாநில அரசுகள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இரண்டு வாரங்களுக்குள் தங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
