ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரயை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று அனந்த்நாக் பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த தலைமை காவலர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
