×

கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது பாஜ எம்எல்ஏ மீது முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக காங்கிரஸ் மாநில அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜவினரின் போராட்டத்தின் போது, பாஜ எம்.எல்.ஏ. பி.பி. ஹரிஷ் மீது காங்கிரஸ் தொண்டர்கள் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வழங்குதல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த பாஜ முடிவு செய்திருந்தது. இதையடுத்து, கண்டோன்மென்ட் பகுதியில் திரண்ட பாஜ தலைவர்கள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த நிலையில், தாவணகெரே மாவட்டம் ஹரிஹர் தொகுதி பாஜ எம்.எல்.ஏ. பி.பி. ஹரிஷ், போராட்ட இடம் தொடர்பான தகவல் இன்றி நேரடியாக குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் காரில் வந்து இறங்கினார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், திடீரென முட்டைகளை வீசி தாக்கினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. நிலைமை மோசமடையத் தொடங்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, எம்.எல்.ஏ. ஹரிஷை பாதுகாப்பாக அங்கிருந்து மீட்டு அருகிலுள்ள தெருவுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Congress ,Baja MLA ,Bengaluru ,Bajwinar ,Karnataka Congress ,Bengaluru, Bajaj M. L. A. B. B. ,Harish ,Congress government ,Karnataka ,
× RELATED முதல்வர் அலுவலக அறிக்கைகள் மாயம்...