புதுடெல்லி: ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டதில் நிதி முறைகேடு நடந்ததாக கூறி லலித் மோடிக்கு அமலாக்கத்துறை அபராதம் விதித்தது. இதனால் அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். இந்நிலையில், ஈடி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி அபராதத்தை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப ஆவலாக உள்ளதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.
