உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு மணிக்கூண்டு திடலில் திமுக பெயர் பலகை பேனரை கிழித்து சேதம்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 21: உளுந்தூர்பேட்டை நகராட்சி மணிக்கூண்டு திடலில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் கூடம் மற்றும் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளுக்கான பெயர் பலகை அப்போதையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயருடன் இருந்ததால் அந்த பெயர் பலகையை வைக்க த.வெ.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல்நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த பெயர் பலகை மணிக்கூண்டு அருகில் பேனர் போட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த பெயர் பலகையின் மேல் பகுதியில் போடப்பட்டு இருந்த பேனரை யாரோ மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன் காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெயர் பலகையை வைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: