மனைவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

 

நத்தம், ஜூலை 20: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவரது மனைவி மோகனவள்ளி (24). இவர் நத்தம் அருகே சிறுகுடியை அடுத்த புதுப்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பார்க்க மது போதையில் வந்த பிரபாகரன், உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறி அவருடன் தகராறு செய்துள்ளார்.

இதனை கண்டித்த மனைவியின் தலை, கைகளில் ப பீர்பாட்டிலை உடைத்து பிரபாகரன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்த புகாரின் பேரில் நத்தம் போலீஸ் எஸ்.ஐ மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Related Stories: