திடீரென நகர்ந்தது பஸ்; தவறி விழுந்த பெண் பலி

பழநி, ஜூலை 20: பழநிஅருகே திடீரென பஸ் நகர்ந்ததால், அதிலிருந்து தவறி விழுந்த பெண் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். பழநி அருகே சிந்தலவாடம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி செல்லாத்தாள் (55). நேற்று முன்தினம் போடுவார்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீடு திரும்புவதற்காக போடுவார்பட்டி பஸ் நிறுத்தத்தில் பழநி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அவர் காலியாக இருந்த சீட்டில் அமர்வதற்காக சென்றபோது, திடீரென பஸ் நகர்ந்தது.

இதில் செல்லாத்தாள் நிலைதடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த செல்லாத்தாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பகுதியில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பழநி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: