சபரிநாதன் குடும்பத்தினருக்கு நீதி முதல்வர் விஜய்க்கு விக்கிரமராஜா நன்றி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் சிறையில் கொல்லப்பட்ட சிறு பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, குடும்ப நலநிதி, மனைவிக்கு அரசு பணி வாய்ப்பு, குழந்தைக்கு கல்விநிதி, குடியிருப்புக்கு வாழ்விடம் என பல்நோக்கு அடிப்படையில், உயிரிழந்த வணிகர் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ள, மக்களுக்கான அதிகாரம் மக்களுக்களிடமே என முழங்கி நீதிசெய்து, லஞ்ச ஊழல் எதிர்ப்புக்கு சபதம் ஏற்றிருக்கும் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு, போராட்டக் களத்தில் நின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம். மனித நேயத்தோடும், பொதுநல நோக்கோடும், வணிக விழிப்புணர்வோடும் முதல்வர் தலைமையில் எடுத்து வரும் இதுபோன்ற நேர்மை மிகுந்த நடவடிக்கைகளுக்கும், லஞ்ச ஊழலுக்கும், போதை கலாச்சாரம் ஒழிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிச்சயம் துணைநிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: