பழநி கோயிலில் கட்டுமான பணிகளை பொறியாளர் குழு ஆய்வு

பழநி, ஜூலை 18: பழநி கோயிலில் நடந்து வரும் கட்டுமான பணிகளை அறநிலையத்துறை பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பெருந்திட்ட வரைவின் கீழ் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நேற்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, செயற்பொறியாளர் சச்சிதானந்தம் தலைமையிலான பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மலைக்கோயில் வின்ச் மற்றும் ரோப்கார் நிலையம், கிரிவீதியில் ரோப்கார் மற்றும் வின்ச் நிலையங்களில் நடந்து பயணிகள் காத்திருப்பு வளாக கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். அப்போது பணிகளின் தரம் குறித்து பரிசோதித்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது பழநி கோயில் இணை ஆணையர் (பொ) வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Related Stories: