கொடுக்கல், வாங்கல் தகராறில் தாக்குதல்

வடமதுரை, ஜூலை 18: வடமதுரை அருகேயுள்ள கருவார்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவின்குமார், சரத்குமார் ஆகியோருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி சண்முகத்தின் வீட்டிற்கு வந்த கவின்குமார், சரத்குமார் அவரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சண்முகம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் கவின்குமார், சரத்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: