திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12வது கிராஸ் தெரு பகுதியில் மேற்கு இன்ஸ்பெக்டர் மீனாட்சி, எஸ்ஐ காதர் மைதீன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த தாடிக்கொம்பு பூஞ்சோலை பகுதியை சேர்ந்த அழகுஜோதி முருகன் (30) என்பவரை சோதனை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 1.20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
