புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை

புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் புதுக்கோட்டை ஆய்வாளர் ஜவஹர் தலைமையிலான போலீஸார் இச்சோதனையில் ஈடுபட்டனர். லஞ்சம் வாங்குவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் இச்சோதனை நடைபெறு வதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

 

Related Stories: