விழுப்புரம் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் வழிபாடு

 

விழுப்புரம், ஜூலை 18: விழுப்புரம் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு உகந்தமாதமான ஆடி மாதம் பிறந்தது நேற்று வெள்ளிக்கிழமை முதல். ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறைக் காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. எனவே இந்த மாதத்தில் விழாக்கள், பூஜைகள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது.

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அம்மன் அலங்காரம், பூஜைகள், பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் என களைகட்டியது. விழுப்புரம் பிரசித்திபெற்ற வீரவாழியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கூழ்படைத்தல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் விழுப்புரம் அருகே கோலியனூர் புத்துவாழியம்மன், வளவனூர் திரௌபதிஅம்மன்கோயில் மற்றும் பூவசரன்குப்பம் செங்கழுநீர்மாரியம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம், வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

 

Related Stories: