இலஞ்சியில் ரூ.32 கோடியில் ரயில்வே மேம்பால பணிகள்: ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆய்வு

 

தென்காசி, ஜூலை 18: இலஞ்சியில் ரூ.32 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை ராணி ஸ்ரீகுமார் எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசியை அடுத்த இலஞ்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ரூ.32 கோடியில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் ராணி ஸ்ரீகுமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்டப்பொறியாளர்கள் சத்தியபதி, கஸ்தூரிராணி, ரயில்வே சீனியர் பிரிவு பொறியாளர் பிரேம்குமார் ஆகியோரிடம் ராணி ஸ்ரீகுமார் எம்பி, பாலப்பணிகளால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் தொடர்ந்து கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே மேம்பாலப்பணியை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பாலப்பணிகளில் ஏதும் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக எனக்கு தகவல் கொடுக்கவும். அதனை நான் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக சரி செய்து தருகிறேன். எக்காரணம் கொண்டும் மேம்பாலம் கட்டுமான பணியை தாமதப்படுத்தாமல் வரும் டிசம்பருக்குள் விரைந்து முடித்து ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவருடன் இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, தென்காசி நகர செயலாளர் சாதிர், இலஞ்சி பேரூர் செயலாளர் முத்தையா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் முகமது அப்துல்ரஹீம், சபீக்அலி, சுப்பிரமணியன், முத்துசுப்பிரணியன், ராமராஜ், சண்முகநாதன், கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், வசந்தகுமார், பூதத்தான், பரதன், காளிராஜ், மருது, வல்லம் செல்வம், அங்கப்பன், தேவி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வவிநாயகம், இலஞ்சி குமாரர் கோவில் அறங்காவலர்கள் பூவையா, ராஜேந்திரன், கதிரவன், இசக்கி, குற்றாலம் கோவில் சுந்தரராஜன், பண்பொழி திருமலைக்கோவில் கணேசன், ஆனந்தராஜ் பவுல் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: