இனி 4 ஆண்டுகள் தான்; வெளிநாட்டு மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அமெரிக்கா

 

வாஷிங்டன்: அமெரிக்க அரசு, வெளிநாட்டு மாணவர்கள், பத்திரிகையாளர்களுக்கு புதிய கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பின்படி மாணவர்கள் இனி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி பெறுவார்கள். இதுவரை, எப்-1 மற்றும் ஜெ-1 விசா பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் புதிய விதிகள், அந்த காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கின்றன.அதற்கு மேல் தொடர விரும்பினால், அரசின் அனுமதி அவசியமாகும். மேலும், பட்டம் முடித்த பின் மாணவர்கள் 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

முன்பு வழங்கப்பட்ட 60 நாள் சலுகை காலம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன், குடியேற்றக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன. வெளிநாட்டுச் பத்திரிகையாளர்களுக்கான விசா காலம் அதிகபட்சம் 240 நாள்கள் என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீன குடிமக்களுக்கு மட்டும் அந்தக் காலவரம்பு வெறும் 90 நாளாக இருக்கும். விசா முறைகேடுகளை தடுக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: