தூத்துக்குடி-பாலருவி எக்ஸ்பிரஸ் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கம்

நெல்லை, ஜூலை 17: தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலில், அதிநவீன எல்எச்பி. பெட்டிகளை கொண்டு இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில், வரும் 20ம் தேதி முதல் அதிநவீன எல்எச்பி பெட்டிகளை கொண்டு இயக்கப்பட உள்ளது. புதிதாக மாற்றியமைக்கப்பட்டு உள்ள இந்த ரயிலில் 1 கார்டு லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு லக்கேஜ், மாற்றுத்திறனாளிகள் பெட்டி, 1 மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி, 5 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 10 முன்பதிவு இல்லா பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பாலருவி விரைவு ரயிலை எல்எச்பி கோச்சுகளாக மாற்றியமைத்ததற்கும், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டியை இணைத்ததற்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Related Stories: