மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைப்பு

திண்டுக்கல், ஜூலை 17: திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப்பள்ளியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மேற்பார்வையில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. திண்டுக்கல்லில் 6 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு மாநகராட்சி கவுன்சிலர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு தேர்தல் நடத்துவதற்காக, கடந்தாண்டு ஏப்.21ல் 130 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி வளாக கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் மேற்பார்வையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையை திறந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி செட்டி நாயக்கன்பட்டி சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு பூட்டி சீல் வைத்தனர்.இதில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன், தேர்தல் பணி உதவியாளர்கள் சிவகுமார், சுரேஷ் குமார், திமுக மாநகர பொருளாளர் சரவணன் மற்றும் நாம் தமிழர், தவெக, பாஜ உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: