டெல்லி: இந்தியாவின் முப்படைகளையும் ஒரே கூட்டு அமைப்பாக இணைக்கும் வகையில், 3 புதிய ‘ஒருங்கிணைந்த தியேட்டர் கமாண்ட்-கள்’ உருவாக்கும் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது. சீன எல்லை பாதுகாப்புக்கு லக்னோ, பாகிஸ்தான் எல்லைக்கு ஜெய்ப்பூர், கடல்சார் பாதுகாப்புக்கு திருவனந்தபுரம் எனப் பிரிக்கப்பட்டு, 4-நட்சத்திர அந்தஸ்து கொண்ட 3 தளபதிகளின்கீழ் இவை செயல்படவுள்ளன. ஒன்றிய அரசு விரைவில் இறுதி ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
