10 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் திடீர் சோதனை: ஐஓசி அறிவிப்பு

 

புதுடெல்லி: இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) கடந்த ஒரு வாரத்தில் 10,000 பெட்ரோல் பங்க்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல், டீசல் எரிபொருள் கலப்படம், மாசுபடுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தர நிர்ணயங்களின் எந்தவொரு விதிமீறலுக்கும் எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.ஒப்பந்த விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தியன் ஆயிலுக்கு எரிபொருள் தரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம். கடந்த ஒரு வாரத்தில் 10,000 சில்லறை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.8,500-க்கும் மேற்பட்ட எரிபொருள் தரப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. எரிபொருளின் தரம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் சரிபார்க்கப்படாத தகவல்களையோ அல்லது கூற்றுகளையோ யாரும் நம்ப வேண்டாம். எரிபொருள் தொடர்பான ஏதேனும் கவலைகள் இருந்தால் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: