க.பரமத்தி, மார்ச் 14: க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கொளமாரி, வைஷ் ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நேற்று மாசி அமாவாசையையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.