ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, தனிஷா ஜோடி முதல் சுற்றில் வெற்றி: காயத்தால் வெளியேறிய சாத்விக், சிராக் இணை

 

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி – சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ – துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ல் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி, டென்மார்க்கின் மேட்ஸ் வெஸ்டர்கார்ட்-டேனியல் லுன்கார்ட் ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய டென்மார்க் ஜோடி 21-19 என்ற செட் கணக்கில் முதல் செட்டை வென்றது.

அப்போது காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதனால் டென்மார்க் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ – துருவ் கபிலா ஜோடி, ஸ்காட்லாந்தின் ஜூலி மெக்பெர்சன் -அலெக்சாண்டர் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் வாங் லிங் சிங் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: