வெகுனகோடா இரட்டை சதம்; இலங்கை யு19 அபார ரன் குவிப்பு

 

காலே: இந்தியா யு19 அணியுடனான முதலாவது இளைஞர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இலங்கை யு19 அணி 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன் குவித்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை யு19 அணி 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. எனினும், செனுஜா வெகுனகோடா ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க… கேப்டன் விமத் தின்சரா 52, கவிகா கமகே 49 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

அபாரமாக விளையாடிய வெகுனகோடா இரட்டை சதம் விளாசி அசத்தினார். முதல் நாள் முடிவில் இலங்கை யு19 அணி 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன் குவித்துள்ளது (89 ஓவர்). வெகுனகோடா 203 ரன் (227 பந்து, 31 பவுண்டரி), சமிகா ஹீனதிலகா 33 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா யு19 பந்துவீச்சில் பரேஷ் படேல் 2, பிரணவ், யஷ்பர்தன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: