லார்ட்ஸ் மகளிர் டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை

லண்டன்: இங்கிலாந்து மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியில், யஸ்டிகா பாட்டியாவின் அபார சதத்தால் இந்தியா வலுவான முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 285 ரன் குவித்த நிலையில், இங்கிலாந்து 170 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து 115 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்தது.

ஸ்மிரிதி மந்தனா 69 ரன், யஸ்டிகா பாட்டியா 39 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மந்தனா மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே சேர்த்து (70 ரன், 130 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். ஜெமிமா 3, கேப்டன் ஹர்மான்பிரீத் 16, தீப்தி ஷர்மா 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அபாரமாக விளையாடிய யஸ்டிகா பாட்டியா சதம் விளாசி அசத்தினார்.

அவர் 113 ரன் (158 பந்து, 14 பவுண்டரி) விளாசி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் மேடி வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார். இந்தியா 84 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்திருந்தது. ரிச்சா கோஷ் 43, சாயாலி 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்தியா மிக வலுவான முன்னிலை பெற்றுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,

Related Stories: