கோவில்பட்டி: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79), வயது மூப்பு காரணமாக சென்னையில் கடந்த 12ம் தேதி இரவு காலமானார். அவரது உடல், நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் 3வது மேட்டுத்தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், எம்எல்ஏக்கள் கருணாநிதி, மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொந்த ஊரான ஆண்டிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் மதன்ராஜா, கலெக்டர் விஷூ மகாஜன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதிசடங்குகளுக்குப்பின் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த இடத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
