வாலாஜா ரயில் நிலையத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு பயணிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை, ஜூலை 13: வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பல்வேறு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கிய வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பல்வேறு ரயில்கள் நின்று செல்ல வேண்டுமென பயனிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய துணைக்கண்டத்தின் முதல் பயணிகள் ரயில் 1853ம் ஆண்டு மும்பை- தானே இடையே இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் ரயில்வே கம்பெனியால் 1856ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ராயபுரம் வியாசர்பாடி – வாலாஜா ரோடு வரை தென் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களும், கர்நாடகம், ஆந்திரா, வட இந்தியா செல்லும் வாராந்திர ரயில்களும் வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன.

பழமை வாய்ந்த ஒரு ரயில் நிலையம் வாலாஜா ரோடு ரயில் நிலையம் ஆகும். இந்த வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் அகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொழிலதிபர்கள் நிறைந்த பகுதி ஆகும். எனவே இந்த ரயில் நிலையத்தில் பழனி, சென்னை- பாலக்காடு, கோயம்புத்தூர் இன்டர்சிட்டி, அல்லப்பி, சதிசாய், டபுள் டக்கர் மாஸ் எஸ்பிசி, சென்னை- ஹூப்லி, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா மைசூர், மதுரை- சண்டிகர், கட்ரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: