வேலூர், ஜூலை 10: பள்ளிக் கல்வித்துறையின் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்து புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறயிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டவாறு திருத்திய பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த விவரத்தை கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
