2வது திருமணம் செய்த காதல் கணவன் மீது மனைவி புகார்

 

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த மனுவில், ‘நான் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவர், என்னுடைய பெயரில் பல வங்கியில் கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது கணவர் என்னை பிரிந்து, அவரது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையில் கணவர் விவாகரத்து கேட்டு, குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 2வது திருமணம் செய்து கொண்ட கணவன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Related Stories: