வேலூர் பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் நகை, செல்போன் பறித்தவர் கைது

வேலூர், ஜூலை 13: திருவண்ணாமலை மாவட்டம் ரெண்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44), கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 18ம் தேதி வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் தாமதமானதால் அங்குள்ள இருக்கையில் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி, மணிகண்டனிடம் இருந்த ஒரு சவரன் செயின் மற்றும் செல்போனை திருடியுள்ளார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மணிகண்டனிடம் நகை மற்றும் செல்போன் பறித்துச் சென்றது அணைக்கட்டு பகுதியை சேர்ந்த விஜய் என்பது தெரிய வந்தது. விஜய்யை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் கைதான விஜய் நகை, செல்போனை விற்பனை செய்து, கள்ளக்காதலிக்கு செலவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டும், புகார் தாரருக்கு ஒரு சவரன் செயின், செல்போன் கிடைக்கவில்லை.

Related Stories: