வேலூர், ஜூலை 10:வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று, மூட்டைக்கு அதிக விலை கிடைப்பதால் நெல்லுடன் குவிந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
