வேலூர், ஜூலை 13: வேலூர் சைதாப்பேட்டையில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் நேற்று காலை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பெண் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த சுமதி(45) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
