வேலூரில் மது போதை தகராறில் பயங்கரம் பெயிண்டர் கழுத்தறுத்து கொடூர கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

 

வேலூர், ஜூலை 6: வேலூர் சதுப்பேரியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், பெயிண்டர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு தொடர்பாக 5 பேைர பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் சதுப்பேரியை சேர்ந்தவர் வினோத்குமார்(42), பெயிண்டர். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிறுகாஞ்சியில் தென்னமர கிணறு பகுதியில், சரவணன் என்பவர் நிலத்தில், அங்குள்ள கிணற்றின் அருகே வினோத்குமார் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து அரியூர் போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி சிவராமன், ஏஎஸ்பி தனுஷ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் சாரா வரவழைத்து துப்பு துலக்கப்பட்டது. இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்றுமுன்தினம் கொலையான வினோத்குமாருடன் சுற்றி வந்து தற்போது, தலைமைறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

அவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட வினோத்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த புலிகேசி என்கிற ராஜ்குமாரும் நேற்று முன்தினம் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத்குமார் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். ராஜ்குமார் தலைமறைவாக உள்ளதால், அவரை ேதடி வருகிறோம். மேலும் வினோத்குமாருக்கு அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே இதுதொடர்பான பிரச்னையில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

ஒரு வீட்டிற்குள் ெசன்ற மோப்ப நாய்
வேலூர் சிறுகாஞ்சி பகுதியில் கொலையான இடத்திற்கு மோப்ப நாய் சாரா துப்பு துலங்க வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தொலைவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றது. பின்னர், அந்த வீட்டை சுற்றி, சுற்றி வந்தது. தொடர்ந்து சதுப்பேரி கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து சதுப்பேரி ஏரிக்கரை வரை ஓடிச்சென்று நின்றது.

ஒரே மாதத்தில் 5 கொலைகளால் அச்சத்தில் பொதுமக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28), ஏசி மெக்கானிக். இவர் கடந்த 14ம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட திடீர் தகராறில், ஒரு கும்பல் விக்னேஷை கொடூரமாகத் தாக்கியதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்பாடி அடுத்த கல்புதூரில் திருவிழா தகராறில் தினகரன் என்பவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

பேரணாம்பட்டில் 6 வயது சிறுவனை அவரது அத்தை ரேவதி என்பவர் அடித்து கொலை செய்தார். காட்பாடி, வேலூர் காகிதப்பட்டறை பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5 கொலை நடந்துள்ளது. தொடரும் கொலைகள் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: