துவரங்குறிச்சி அருகே கார் மோதி இடியாப்ப வியாபாரி பரிதாப சாவு

துவரங்குறிச்சி, ஜூலை 13:துவரங்குறிச்சி அருகே கார் மோதி இடியாப்ப வியாபாரி பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் சூரப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (50). இடியாப்ப வியாபாரியான இவர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வடக்கு எல்லை காட்டுபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல, டூவீலரில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். செவந்தாம் பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, பின்னால் திருச்சியை சேர்ந்த மூர்த்தி (56) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக செல்வத்தின் டூவீலர் மீது மோதியது. இதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதேபோன்று அதே சாலையில் பயணித்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது அந்த கார் மோதியதில் அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (68) பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி புஷ்பம் (56) ஆகியோர் கீழே விழுந்தனர். மீனாட்சி சுந்தரத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான கார் சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஏறி நின்றது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அடிபட்டவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: