துறையூர், ஜூலை 9: துறையூர் அடுத்த சேனப்பநல்லூர் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு மத்தியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேனப்பநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையால் தினசரி பலதரப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர். தினசரி மாலை 6 மணிக்கு மேல் மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் முன்னால் மற்றும் சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்ட பகுதியில் அமர்ந்து திறந்தவெளி மது பார் போல மது அருந்துவதாகவும் மது அருந்தி ஒரு சில மணி நேரங்களில் ஆடைகளை கலைந்து மது போதையில் கீழே மயங்கி கிடப்பதாகவும் ஒரு சிலர் தகாத வார்த்தைகளால் அதிக சத்தத்துடன் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
