உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தர்மபுரி, ஜூலை 13: பென்னாகரம் வட்டத்தில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், வரும் 15ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம், ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜூலை மாதத்திற்கான முகாம் பென்னாகரம் வட்டத்தில் நாளை மறுநாள் (15ம்தேதி) காலை 9 மணிமுதல் 16ம்தேதி காலை 9 மணி வரை நடக்கிறது. இந்நாளில் மாவட்ட கலெக்டர், வருவாய் வட்டத்தில் இருந்து கள தணிக்கையில் ஈடுபட்டு, அரசு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும் 15ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.அதனை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற உள்ளார்கள். மேலும், மேற்படி முகாம் நாளில் வட்டத்தில் உள்ள மூன்று உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்தில், சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை அளித்து உடன் தீர்வு காணலாம். இவ்வாறு கலெக்டர்
தெரிவித்துள்ளார்.

Related Stories: