மதுரை: கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில் 4 ஆண்கள், ஒரு பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 42 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
