ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 469 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக் ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. அப்போது ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டினர்.

மேலும் படகுகளை சிறைபிடிக்கும் நோக்கில் அதிவேக ரோந்து கப்பல் மூலம் பின் தொடர்ந்து விரட்டியதால், இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் தப்பிக்க மீனவர்கள் வலைகளை கடலில் வெட்டி வீசி விட்டு தப்பினர். இதனால் பெரிய படகுகள் மீன் பிடிக்க முடியாமல் வேறு பகுதிக்குச் சென்றன.

Related Stories: