திருமலை: தெலங்கானாவில் பேரனுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பூரி சுட்டு கொடுத்த சுவாரஸ்யம் நடந்துள்ளது. தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பான அரசியல் வாழ்கையில் அரசு நிர்வாகத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் குடும்பத்தில் தனது பேரனின் ஆசையை முதல்வர் ரேவந்த் ரெட்டி நிறைவேற்றி மகிழ்ந்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ‘தாத்தா நீங்கள் பூரி சுட்டால் தான் சாப்பிடுவேன்’ என்றால் மறுக்க முடியுமா. பரபரப்பான வேலையுடன் வாழ்க்கையில் பேரன் கேட்டவுடன் பூரி மாவை எடுத்து பேரனின் புன்னகையுடன் பூரி சுட்டு கொடுத்து கழித்த சில இனிமையான தருணங்கள் இவை’ என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த சிறப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
