மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு 6 குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல்

புதுடெல்லி: ரூ.6,000 கோடி மதிப்பிலான மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் சிபிஐ 6 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், செயலி நிறுவனர் சவுரவ் சந்திரகர், இணை நிறுவனர் ரவி உப்பல் உள்ளிட்ட 66 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சில வாரங்களுக்கு முன் சந்திரகர் ஓமனில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட கும்பலுக்கு இருந்த அரசியல் ஆதரவை கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிபிஐ கூறி உள்ளது.

Related Stories: