ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலி நோயாளிக்கு இசிஜி எடுத்த செக்யூரிட்டி

 

புதுக்கோட்டை, ஜூலை.9: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சுவலி காரணமாக நோயாளி ஒருவர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அப்போது பணியில் இரண்டு செவிலியர் மட்டுமே இருந்ததால் அந்த நோயாளிக்கு அந்த மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர் (செக்யூரிட்டி) இசிஜி எடுத்து அதன் ரிப்போர்ட்டை எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Stories: