ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.58 கோடி

 

ராமேஸ்வரம், ஜூலை 8: ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 58 லட்சத்தை தாண்டியது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அம்பாள் திருக்கல்யாண முன் மண்டபத்தில் நேற்று உண்டியல் வசூல் எண்ணப்பட்டது. கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் திறப்பில் ராமநாதசுவாமி கோயில் உண்டியல், உபகோயில், யானை பராமரிப்பு, திருப்பணி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட தொகை ரூ.1கோடியே 58 லட்சத்து 30 ஆயிரத்து 301, தங்கம் 30 கிராம், வெள்ளி 3 கிலோ 100 கிராம் மற்றும் 148 அயல்நாட்டு பண நோட்டுகள் வசூலாகி இருந்தது. இதில் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் தேவஸ்தான அலுவலக ஊழியர்கள், வங்கி பணியாளர்கள், பர்வதவர்த்தின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றனர்.

 

Related Stories: