இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி கடியாபட்டியில் கபடி போட்டி

திருமயம், மார்ச் 12: திருமயம் அருகே கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் 41 அணிகள் பங்கேற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி 63ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 41 அணிகள் பங்கேற்றது. முதலாவதாக அனைத்து தரப்பு வீரர்களும் பங்கேற்கும் போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு சுற்றாக நடந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன.பின்னர் நடந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் மந்தையம்மன் அணி முதலிடமும், பி.பூவம்பட்டி சித்தி விநாயகர் அணி இரண்டாமிடமும், அறந்தாங்கி எல்என்புரம் அக்னி சிறகுகள் அணி மூன்றாமிடமும், கடியாபட்டி முத்துமாரி அம்மன் அணி நான்காமிடமும் பிடித்தது.

இதைதொடர்ந்து நடந்த 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான கபடி போட்டியில் 8 அணிகள் பங்கேற்றது. இதில் கோனாபட்டு அம்பாள் ஏ அணி முதலிடமும், ராவுத்தம்பட்டி தங்கவேல் நினைவு குழு இரண்டாமிடமும், மதுரை இறகுபட்டி அணி மூன்றாமிடமும், கோனாபட்டு அம்பாள் பி அணி நான்காமிடமும் பிடித்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கபடி குழு, ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். கபடி போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டனர்.

Related Stories: