விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் அரசு அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி

 

விழுப்புரம், ஜூலை 2: விபத்து நஷ்டஈடு வழங்காததால் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(63). கடந்த 2026ம் ஆண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது விழுப்புரம் மீன்வளத்துறைக்கு சொந்தமான ஜீப் மோதியதில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி வெங்கடேசன், கடந்த 2025ம் ஆண்டு ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு ரூ.8.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்காததால் மீண்டும் மூல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சிக்னல் பகுதியில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். அங்கிருந்த உதவி இயக்குநர் சாந்தி, இழப்பீட்டு தொகை வழங்க ஒரு வார காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் அதற்குள் இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக உறுதி அளித்த பிறகு அவர்கள் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: