பண்ருட்டி, ஜூலை 2: பண்ருட்டி அருகே செம்மேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன்(40). இவர் மே மாதம் 31ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, இவரது மனைவி ரஞ்சனி(34), மகள் ரங்கவர்ஷினி(9), மகன் ஜீவப்பிரியன்(6) ஆகிய மூவரும் வீட்டில் இல்லை. அக்கம்பக்கத்தில் தேடியும், உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சிவராமன் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் திவாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன தாய் மற்றும் இரு குழந்தைகளை தேடி வருகின்றனர்.
