மண்டபம் பகுதியில் குடிநீர் திட்ட பணிக்காக சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

 

மண்டபம், ஜூலை 1: மண்டபம் பகுதியில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியால் சாலை சேதமடைந்து விட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சியில் நேற்று மாதாந்திர கவுன்சிலர்கள் மன்றம் கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் முனியசாமி மன்ற தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசு திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணிகளில் அனைத்து தெருக்களிலும் சாலைகள் வழியாக பைப்புகள் பதிக்கப்பட்டதால் சாலைகள் சேதப்படுத்தி பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆதலால் பணிகள் முடிந்த பகுதிகளில் சாலையை புதுப்பிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல இந்த திட்டம் மண்டபத்தில் பல்வேறு வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறாமல் திட்டப் பணியில் முடக்கப்பட்டுள்ளது. ஆதலால் மண்டபம் பேரூராட்சி முழுவதும் குடிநீர் குழாய்கள் இணைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: