காரைக்குடி, ஜூன் 30: காரைக்குடியில் மாவட்ட அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் காரைக்குடி அமராவதிபுதூர் ஸ்ரீராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் வென்றுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சித்தார்த், ஜீவநாதன், ஆர்யா, தனுஷ் ஆதித்யா, 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சாய் விஷஹான், 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஹயாத்தி, 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சித்தார்த் அபிமன்யு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீராஜராஜன் கல்விக் குழும தலைவர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சுப்பையா பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் வடிவாம்பாள், துணைமுதல்வர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த வைத்தீஸ்வரனுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
