ரிஷிவந்தியம் அருகே டாரஸ் லாரியில் 8.5 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 

ரிஷிவந்தியம், ஜூன் 29: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக ரிஷிவந்தியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் சந்தை மேடு பகுதியில் காவல் ஆய்வாளர் சிவமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை மறித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இளைஞர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது விற்பனைக்காக 8.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும், அவர்கள் சேலம் மாவட்டம்,

தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த மணியன் மகன் சத்யராஜ் (38) என்பதும், சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் அருள்குமார் (24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 8.5 கிலோ கஞ்சா மற்றும் டாரஸ் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்யராஜ் என்பவர் லாரி ஓட்டுநராக ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி மூலமாக சரக்கு ஏற்றி இறக்கி வந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஒடிசா பகுதியைச் சேர்ந்த நபர்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலம் தமிழகத்திற்கு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்துள்ளது.

Related Stories: