உளுந்தூர்பேட்டையில் வாகன தணிக்கை;  சாலை வரி செலுத்தாத புதுவை ஆம்னி பேருந்து பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

 

உளுந்தூர்பேட்டை, ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி ஆம்னி பேருந்து தமிழ்நாட்டு சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பேருந்துக்கு சாலை வரி ரூ. 43,200 மற்றும் அபராத கட்டணம் ரூ.10 ஆயிரம் விதித்தனர்.

இதே போல் வரி செலுத்தாத மேக்சி கேப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வாகனத்திற்கு சாலை வரி ரூ.1,69,000 மற்றும் அபராதம் ரூ.22,000 விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்திய பிறகு வாகனங்கள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறி தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

Related Stories: